நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு

தலவாக்கலை பி.கேதீஸ்

பெருந்தோட்ட மற்றும் கிராமப்புற மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைகளுக்கு விரைவான மற்றும் நிரந்தர தீர்வை வழங்கும் நிகழ்ச்சி திட்டமொன்று நுவரெலியா சினிசிட்டா கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிராமப்புற மற்றும் பிராந்திய குடிநீர் விநியோக மேம்பாட்டுத் துறை இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தா, வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்னாயக்க நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மருதபாண்டி ரமேஸ்வரன், எஸ்.பி. திஸாநியக்க ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இதன்போது நுவரெலியா மாவட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் மக்களினால் முன்வைக்கப்பட்ட பிரச்சனைகளுக்கு உடனடியாக அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு நீர்வழங்கல் அமைச்சரினால் தீர்வு வழங்கப்பட்டது. மேலும், நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைகளுக்கு விரைவில் நிரந்தர தீர்வினை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சரினால் அறிவுறுத்தப்பட்டது

administrator

Related Articles