நோர்வூட் ஆரம்பபிரிவு பாடசாலை மூடப்பட்டது, காரணம் இதுதான்…

நோர்வூட் ஆரம்பபிரிவு பாடசாலை மூடப்பட்டது, காரணம் இதுதான்…

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் ஆரம்பபிரிவு இன்றைய தினம் திறக்கப்படாமையினால் ஆரம்ப பிரிவிற்கு வந்த சில மாணவர்கள் மீண்டும் வீட்டுக்கு திருப்பி அனுப்பபட்டனர்.

நோர்வுட் பிரதேச சபைக்கு கீழ் இயங்கும் நோர்வூட் பிரதேச பொது நூலகத்தில் பணிபுரிந்து வந்த பெண் ஒருவருக்கும் அவருடை பிள்ளை ஒன்றுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நோர்வூட் ஆரம்ப பிரிவு பாடசாலை மூடப்பட்டுள்ளது.

ஆரம்ப பிரிவில் தரம் 05ல் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதன் காரணமாக பாடசாலை மூடப்பட்டதோடு குறித்த வகுப்பில் கல்வி பயிலும் 40 மாணவர்களுக்கு இன்றைய தினம் பி.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்ளபடவிருப்பதாக மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்

இதேவேளை நோர்வூட் பொது நுாலகமும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

administrator

Related Articles