“பங்களாதேசில் பிரதமருக்கு கிடைத்த மரியாதை” (படங்கள்)

“பங்களாதேசில் பிரதமருக்கு கிடைத்த மரியாதை” (படங்கள்)

இரண்டு நாள் உத்தியோப்பூர்வ விஜயமாக பங்களாதேசிற்கு சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு அங்கு அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசினாவால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஸ் ஹஸ்ராட் சஜாலால் சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசினா, விமான நிலையத்திற்கு வருகைத்தந்து வரவேற்பளித்ததுடன் அங்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையும் செலுத்தப்பட்டுள்ளது.

பங்களாதேஷ; குடியரசின் தேசத்தின் தந்தையாக போற்றப்படும் பங்கபந்து ஷேக் முஜிபர் ரஹ்மான் அவர்களின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேசின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றை முன்னிட்டு பிரதமரின் இவ்விஜயம் அமைந்துள்ளது.

administrator

Related Articles