பங்களாதேஷ் “ரோஹிங்கிய”அகதி முகாமில் தீ பரவல்!! 18 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர்!! பலரை காணவில்லை!!

பங்களாதேஷ் “ரோஹிங்கிய”அகதி முகாமில் தீ பரவல்!! 18 ஆயிரம் பேர்  வீடுகளை இழந்தனர்!! பலரை காணவில்லை!!

பங்களாதேஷில் அமைந்துள்ள ரோஹிங்கிய அகதி முகாமில் இன்று பிற்பகல் தீடிரென தீ பற்றியுள்ளது. இதனால் அந்த முகாமில் அகதிகளாக வாழ்ந்த 18 ஆயிரம் பேர்களின் குடிசைகள் எரிந்து நாசமானது.

அத்துடன் இருவர் உயிரழந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.

மியன்மார் ரோஹிங்கியாவில் வாழ்ந்து வந்த சுமார் 8 லட்சம் அகதிகள் தங்களது உயிருக்கு அஞ்சி எல்லை நாடான பங்களாதேஷிற்கு இடம்பெயர்ந்தனர்.

அவர்களை பங்களாதேஷ் அரசு தென் பகுதியில் அமைக்கப்பட்ட விசேட முகாமில் தங்க வைத்து பராமரித்து வந்தனர்.

இந்த சூழ்நிலையில் துரதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீக்கான காரணம் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.

அத்துடன் இன்றைய தினம் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக துருக்கி அரசினால் நிர்வாகிக்கப்பட்ட வைத்தியசாலையும் தீ பற்றியுள்ளது.. இந்த வைத்தியசாலையில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

administrator

Related Articles