பங்களாதேஸை பதம் பார்க்கும் நியூசிலாந்து

பங்களாதேஸை பதம் பார்க்கும் நியூசிலாந்து

பங்களாதேஸ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்;கு இடையில் இடம்பெற்ற முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிப் பெற்றுள்ளது.

நியூசிலாந்தின் டுனேடின் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட்டது.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி 50 ஓவர்களில் 41.5 ஓவர்களை மாத்திரம் எதிர்க்கொண்டு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 131 ஓட்டங்களை பெற்றது.

அந்த அணியின் துடுப்பட்டத்தில் மஹமதுல்ல மாத்திரம் அதிகூடிய 27 ஓட்டங்களை பெற்றதோடு நியூசிலாந்தின் பந்து வீச்சில் டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுக்களையும், ஜேம்ஸ் நீசம் மற்றும் மிச்செல் செண்ட்னர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதனையடுத்து 132 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலளித்த நியூசிலாந்து ஹெண்ரி நிக்கோலஸ் ஆட்டமிழக்காமல் பெற்ற 49 ஓட்டங்கள் உதவியுடன், 2 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்தது.
பங்களாதேஸின் பந்து வீச்சில் மஹமூத் மற்றும் டஸ்கிம் அஹமட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக டிரெண்ட் போல்ட் தெரிவானார்.

இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் நியூசிலாந்து ஒரு வெற்றியுடன் முன்னிலைப் பெற்றுள்ளது.

இரண்டாவது ஒரு நாள் போட்டி கிறைஸ்ட்செச்சில் எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

administrator

Related Articles