பசறையில் பட்டபகலில் கொள்ளை, கொள்ளையர்களை தேடி விசாரணை

பசறையில் பட்டபகலில் கொள்ளை, கொள்ளையர்களை தேடி விசாரணை

பசறை, சிங்கள மத்திய மகா வித்தியாலயம் அமைந்துள்ள வீதியில் சென்று கொண்டிருந்த குடும்பப் பெண்ணொருவரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை இனந்தெரியாத நபரொருவர் அறுத்து சென்றுள்ளார்.

இச்சம்பவம் நேற்று  பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் பசறை பகுதியில் உள்ள அரச நிறுவனமொன்றில் கடமையாற்றி வருகின்றார்.

அவரது மகளை மேலதிக வகுப்பில் இருந்து அழைத்து வர சென்ற வேளையிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் CCTV காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு சந்தேக நபரை தேடி வருகின்றனர்.

எனினும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

administrator

Related Articles