பசறை பஸ் விபத்தில் 15 பேர் பலி, 32 பேர் படுகாயம், CCTV காட்சிகள்

பசறை பஸ் விபத்தில் 15 பேர் பலி, 32 பேர்  படுகாயம், CCTV காட்சிகள்

பசறை – லுணுகல பிரதான வீதியில் 13 ஆம் கட்டைப் பகுதியில் லுணுகல நகரிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 15 பேர் பலி, 32 படுகாயம். இவர்களில் 27 பேர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

05 பேர் பசறை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் பசறை பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரி சமரபந்து தெரிவித்தார்.

விபத்துக்கான காரணம் தொடர்பாக இதுவரை என எந்த தகவலும் பொலிஸார் வெளியிடவில்லை. மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை விபத்து தொடர்பான CCTV காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

-நடராஜா மலர்வேந்தன்-

administrator

Related Articles