பசறை பஸ் விபத்துக்கு பொலிஸாரும், RDAயும் பொறுப்பு கூற வேண்டும் – கெமுனு

பசறை பஸ் விபத்துக்கு பொலிஸாரும், RDAயும் பொறுப்பு கூற வேண்டும் – கெமுனு

பசறை 13 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்துக்கு சாரதி மாத்திரம் காரணமல்ல எனவும் ஆகவே அவரை மட்டும் குற்றம் சுமத்துவதில் நியாயமில்லை எனவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

மாறாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும், பொலிஸாரும் விபத்து ஏற்பட்டமைக்கு பொறுப்பு கூற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபை குறித்த வீதியில் இருக்கும் பாறையை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், மேலும் அங்கு வீதி சமிஞ்சைகளை அமைக்க பொலிஸார் தவறியுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் எதிர் திசையில் வந்த டிப்பர் வண்டியின் சாரதியும் விபத்துக்கு பொறுப்பு கூற வேண்டும் எனவும் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

14 பேரின் உயிர்களை பறித்த குறித்த பஸ் விபத்தில் 20 க்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர்.

அத்துடன் குறித்த பஸ்சை செலுத்திய சாரதி மற்றும் டிப்பர் வண்டியின் சாரதி ஆகியோர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பஸ்சின் சாரதி தொடர்ந்தும் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

administrator

Related Articles