பசறை விபத்தின் எதிரொலி: ஊவா ஆளுநரின் அதிரடி

பசறை விபத்தின் எதிரொலி: ஊவா ஆளுநரின் அதிரடி

ஊவா மாகாணத்தில் அபாயமிக்க வீதிகளை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முசாமில் தெரிவித்துள்ளார்.

அதன்படி குறித்த வீதிகளில் வேகக் கட்டுப்பாட்டை அறிவிக்கும் விளம்பரங்களை காட்சிப்படுத்தவும், பாதுகாப்பு வேலிகளை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்ட பசறை 13 ஆம் கட்டை பகுதியில் தற்போது வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து ஏற்பட்ட பகுதியை ஆபயமிக்க பகுதியாக காட்சிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் குறித்த பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்த விபத்தை அடுத்தே மேற்படி உத்தரவை ஆளுநர் வழங்கியுள்ளார்.

administrator

Related Articles