பசறை விபத்து தொடர்பில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது

பசறை விபத்து தொடர்பில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது

பசறை 13 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் முழுமையான விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளது.

வாகன கட்டுப்பாடு, பேருந்து போக்குவரத்து சேவை, தொடருந்து பெட்டிகள், மோட்டார் வாகன கைத்தொழில்துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை கோரியுள்ளார்.

அதாவது விபத்து தொடர்பில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கடுமையான தீர்மானங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விபத்து இடம்பெற்ற வீதியில் நீண்ட காலமாக அகற்றப்படாமலிருக்கும் பாறையை அகற்றுவதற்கு விரைவாக நடவடிக்கை மேற்கொள்வதாக, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த வீதியை அபிவிருத்தி செய்த ஒப்பந்த நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வீதியில், வீழ்ந்து கிடக்கும் பாறையை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடதக்கது.

இதேவேளை, வீதி அபிவிருத்தி அதிகார சபையிடமும், எதிர்வரும் நாட்களில் விபத்து குறித்து விசாரிக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

administrator

Related Articles