விபத்து ஏற்பட்டு ஒரு வாரம் கடக்கும் நிலையில் வீதியில் இருந்து அகற்றப்பட்ட கல்

விபத்து ஏற்பட்டு ஒரு வாரம் கடக்கும் நிலையில் வீதியில் இருந்து அகற்றப்பட்ட கல்

பசறை 13 ஆம் கட்டை பகுதியில் விபத்து ஏற்பட்டபோது வீதியோரம் இருந்த பாரிய கற்பாறை முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

இந்த கற்பாறையை அகற்றும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த பகுதியில் பாதுகாப்பு வேலிகளை அமைக்க நடவடிக்கை அண்மையில் எடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை ஊவா மாகாணத்தில் அபாயமிக்க வீதிகளை அடையாளம் கண்டு அவற்றை புனரமைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முசாமில், வீதி அபவிருத்தி திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

administrator

Related Articles