பசில் ராஜபக்ச நாடாளுமன்றம் வரவேண்டும் என்பதே பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பம்- டிலான்

பசில் ராஜபக்ச நாடாளுமன்றம் வரவேண்டும் என்பதே பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பம்- டிலான்

பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வரவேண்டும் என்பதே பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பமாக காணப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
பல பொருளாதார வெற்றிகளுக்கு பங்களிப்பு செய்தவர் பசில் ராஜபக்ச என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெல்வதற்கான பெரும் பங்களிப்பை வழங்கியவர் பசில் ராஜபக்ச என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
அரசியல் வட்டாரங்களுக்கு அப்பால் உள்ளவர்களும் பசில் ராஜபக்ச நாடாளுமன்றம் செல்வதை விரும்புவார்கள் என குறிப்பிட்டுள்ள டிலான் பெரேரா பசில் ராஜபக்ச நாடாளுமன்றம் செல்வது குறித்து தேவையற்ற அச்சங்களை சில குழுக்கள் ஏற்படுத்த முயல்கின்றனா எனவும் தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles