பசுக்களை கடத்தும் முயற்சி முறியடிப்பு!!

பசுக்களை கடத்தும் முயற்சி முறியடிப்பு!!

பசறை- நமுனுகுல வீதியில் அமைந்துள்ள பிபிலேகம கிராமத்தில் இருந்து அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக பதுளைக்கு கடத்தி வரப்பட்ட 8 பசுக்களையும் , கடத்தலுக்காக பயன்படுத்தபட்ட லொறியையும் பசறை பொலிஸார் பதுளை- பசறை வீதி 10ஆம் கட்டை பகுதியில் வைத்து கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது குறித்த லொறியின் சாரதியும் அவருடன் இருந்த நபரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

ஆரம்பக்கட்ட விசாரணையின் போது குறித்த பசுக்கள் பிபிலேகமயிலிருந்து பதுளைக்கு இறைச்சிக்காக வெட்டும் நோக்கில் கொண்டு செல்லப்பட்டமை தெரியவந்துள்ளது.

பசறை பொலிஸ் நிலையத்தின் உதவி பொலிஸ் பரிசோதகர் பி.ஐ.பிரியந்த சாமிந்த, சார்ஜன்ட் அஞ்சுல இசுரு குமார குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே இக்கைது இடம்பெற்று கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை எதிர்வரும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பசறை நிருபர்

administrator

Related Articles