பசுபிக் கடல் பகுதியில் கரை ஒதுங்கியிருக்கும் விசித்திர உயிரினம்

Share

Share

Share

Share

தென்மேற்கு பசுபிக் கடல் பகுதியில் உள்ள பப்புவா நியூ கினியாவின் தலைநகரம் போர்ட் மோர்ஸ்பி

அந்நாட்டின் பிஸ்மார்க் கடற்கரையோரம் உள்ள சிம்பேரி தீவு பகுதியில் நேற்று கடற்கன்னியை போன்ற தோற்றமுடைய விசித்திர உயிரினம் ஒன்றின் உடல் கரை ஒதுங்கியுள்ளது.

நியூ அயர்லேண்டர்ஸ் ஒன்லீ எனும் முகநூல் பக்கத்தில் இது குறித்த தகவல்கள் முதலில் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய உயிரினங்கள் “கிளாப்ஸ்டர்” என அழைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கரை ஒதுங்கியிருக்கும் இந்த “கிளாப்ஸ்டர்” உயிரினத்தின் உடல் எடை, நீளம், மற்றும் இவை எவ்வாறு உருவாகின்றன என்பது தொடர்பில் தகவல்களை அறிவது கடினம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இவை ஒருவகையான கடற்வாழ் பாலூட்டி உயிரினங்கள் என்பதை தவிர மேற்கொண்டு எதுவும் சொல்வது கடினம் என ஆழ்கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்து கடலிலேயே நீண்ட நாட்கள் பிற மீன்களால் உண்ணப்பட்டு தோல் மற்றும் மாமிசத்தை இழக்கும் திமிங்கிலம், டால்பின் போன்ற உயிரின வகைகள் அடையும் நிறத்தையே தற்போது கரை ஒதுங்கியிருக்கும் “கிளாப்ஸ்டர்” கொண்டிருப்பதால் அனேகமாக இதுவும் ஒரு திமிங்கில வகை உயிரினமாக இருக்கலாம் என சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒட்டாவாவில் கோவிட் காரணமாக நோயாளிகள் மருத்துவமனைகளில்...
ரொறன்டோவில் வீட்டு விற்பனையில் பின்னடைவு
கனடாவில் மாணவர்கள் தொழில்களில் ஈடுபடுவதில் சிக்கல்
விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்