பட்டர் கேக் செய்வது எப்படி

பட்டர் கேக் செய்வது  எப்படி

தேவையான பொருட்கள்:5 முட்டை250gm கிராம் பட்டர்250gm கிராம் சீனி250gm கிராம் கோதுமை மா1/2 மே.க பேக்கிங் பவுடர்1/2 -1 மே.க வனிலா பவுடர் / எசன்ஸ்
செய்முறை:ஒவனை 175° C யில் சூடேற்றவும்.
பட்டர் மற்றும் சீனியை சேர்த்து நன்கு அடித்துக் கொண்டு ஒவ்வொரு முட்டையாகச் சேர்த்து அடிக்கவும் (விட்ட முட்டை நன்றாக அடித்துக் கலந்த பின்பே அடுத்த முட்டையை விடவும்).
மா, பேக்கிங் பவுடர் மற்றும் வனிலாபவுட்ரை, அரிதட்டினால் பட்டர் கலவைக்குல் 2 அல்லது 3 பிரிவாக அரித்து சேர்த்துக் கலக்கவும். 
பேக்கிங் தட்டில் பேக்கிங் பேப்பரை வைத்து அதன் மேல் கேக் கலவையை ஊற்றி, சமப்படுத்து கொள்ளவும் (விரும்பினால் கயூ, பிளம்ஸ் மேலால் தூவலாம்).
175° C யில் 30 – 45 நிமிடம்கள் கேக்கை வேக விடவும்.கேக் ஆறியதும் துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
பட்டர் கேக் தயார்!!!

administrator

Related Articles