பதுளையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் புதிய நகர்வு!

பதுளையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் புதிய நகர்வு!

தற்போதைய அரசியல் நிலைமைகளை கருத்திற்கொண்டு எதிர்வரும் காலத்தில் பதுளை மாவட்டத்தில் எவ்வாறான அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளலாம் அத்துடன் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிகள் பதுளையில் இன்று ஆராய்ந்துள்ளனர்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் பதுளை மாவட்ட செயற்பாட்டாளர்களுக்கான
விசேட கூட்டமொன்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பதுளை பணிமனையில் இடம்பெற்றது.


தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவரும் சங்கத்தின் பதுளை மாவட்ட பிரதான அமைப்பாளருமான
ராஜமாணிக்கம் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளர் சோ. ஸ்ரீதரன், பிரதிப் பொதுச் செயலாளர் கல்யாணகுமார், நிர்வாகச் செயலாளர் வீரப்பன்,தொழிலாளர் தேசிய சங்கத்தின் உயர்பீட உறுப்பினர் மனோகரன்,தொழிலாளர் தேசிய சங்கத்தின் பதுளை மாவட்ட தொழிற் சங்க அமைப்பாளர் விஸ்வநாதன் உட்பட செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

administrator

Related Articles