பத்தனையில், கொலையில் முடிந்த மனைவிகளுக்கு இடையிலான மோதல் (படங்கள்)

பத்தனையில், கொலையில் முடிந்த மனைவிகளுக்கு இடையிலான மோதல் (படங்கள்)

நபர் ஒருவரின் இரண்டு மனைவியருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒரு மனைவி உயிரிழந்துள்ளார்.

பத்தனை பொரஸ்ட் கிரீக் தோட்டத்தில் இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முதலாவது மனைவியும் அவரது மகளும் இணைந்து இரண்டாவது மனைவியை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 11.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

42 வயதான விஸ்வநாதம்மா என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முதலாவது மனைவி கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் முதலாவது மனைவி மற்றும் மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திம்புள்ள-பத்தனை மேற்கொண்டு வருகின்றனர்.

administrator

Related Articles