பந்து வீச்சில் இந்தியாவை சிதறடித்த ஜோ ரூட்

பந்து வீச்சில் இந்தியாவை சிதறடித்த ஜோ ரூட்


இங்கிலாந்து அணியின் நட்சத்திர துடுப்பாட்டவீரர் ஜோ ரூட் அபாரமான துடுப்பாட்ட வீரர் என்பது நாம் அறிந்த ஒன்றே எனினும் அவர் இன்றைய தினம் தனது அபார பந்து வீச்சு ஆற்றலையும் வெளிப்படுத்தியுள்ளார்.


இந்தியாவிற்கு எதிராக அஹமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்;ட் போட்டியில் ரூட்டின் பந்து வீச்சு இந்திய துடுப்பாட்ட வீரர்களை திணறச் செய்துள்ளது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 112 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.


இந்த நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணியும் 145 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.


இதில் ரோஹித் சர்மா 66 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
பந்து வீச்சில் அணித் தலைவர் ஜோ ரூட் 6.2 ஓவர்கள் பந்து வீசி 8 ஓட்டங்களைக் கொடுத்து ஐந்து முக்கிய விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

administrator

Related Articles