மட்டக்களப்பு யங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கணேஷமூர்த்தி ஞாபகார்த்த அணிக்கு ஏழு பேர் கொண்ட மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் மாவட்டத்திலுள்ள மிகப்பலம் வாய்ந்த 48 அணிகள் கலந்து கொண்டன.
இச்சுற்றுப்போட்டியில் ஓட்டமாவடி வளர்பிறை அணியினர் மாவட்டத்தின் சிறந்த அணிகளான ரெட்ணம்ஸ், யங் ஸ்டார், இராமகிருஷ்ணா ஆகிய அணிகளை வீழ்த்தி அரையிறுதியாட்டத்திற்குத் தெரிவாகியிருந்தனர்.
அரையிறுதிப்போட்டியில் மட்டக்கப்பு மாவட்டத்தின் மிகப்பலம் பொருந்திய டிஸ்கோ அணியினை எதிர்கொண்டு 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியினைத் தழுவியிருந்த நிலையில், தொடரின் சம்பியன் கிண்ணத்தை டிஸ்கோ அணியினர் கைப்பற்றினர்.
இரண்டாமிடத்தினை மட்டுநகர் லைட் ஹவுஸ் அணியினரும் மூன்றாம் நிலைக்கான போட்டியில் வளர்பிறை அணியினர் மட்டு மாவட்டத்தின் சிறி ராமகிருஷ்ணா அணியினை பெனால்டி உதையில் 4-3 என்ற கணக்கில் வெற்றியீட்டி இச்சுற்றுத்தொடரின் 3வது அணியாக (2nd Runnerup) மகுடம் சூடியதுடன், வெற்றிக்கிண்ணம் மற்றும் 20,000 ரூபாய் பணப்பரிசையும் பெற்றுக் கொண்டனர்.
மிகமிகச்சிறப்பாக விளையாடிய கழகத்தின் அனைத்து வீரர்ளுக்கும் வாழ்த்துக்கள்.