பல மாவட்ட கலெக்டர்கள் உட்பட 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு

பல மாவட்ட கலெக்டர்கள் உட்பட 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி, நெல்லை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி ஆட்சியராக செந்தில்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி குறைதீர்ப்பு சிறப்பு அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் சுகாதாரத்துறை இணை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியராக விஷ்ணு நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி கலெக்டர் அருண் சுந்தர் தயாளன், சுற்றுச்சூழல், வனத்துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி ஆட்சியராக சமீரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

administrator

Related Articles