பளையில் 239 கிலோ கேரளா கஞ்சா, இருவர் கைது

பளையில் 239 கிலோ கேரளா கஞ்சா, இருவர் கைது

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவில் 239 கிலோ கேளா கஞ்சா மீட்டுள்ளதாகவும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கடற் படையினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவை மீட்கப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் அதிகாலை 3 மணியளவில் குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மீட்டுப்பட்ட கஞ்சா பொதிகளையும், சந்தேக நபர்களையும் பளை பொலிசாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும், நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்படுவதாகவும் பளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.

administrator

Related Articles