பள்ளத்தில் விழுந்தது இங்கிலாந்து, கன்று குட்டிகளை வைத்து மிரட்டிய இந்தியா

பள்ளத்தில் விழுந்தது இங்கிலாந்து, கன்று குட்டிகளை வைத்து மிரட்டிய இந்தியா

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதுலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 66 ஓட்டஙகளால் வெற்றிப் பெற்றுள்ளது.

இன்று (23) நடைபெற்ற முதுலாவது ஒரு நாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்கியது.

அதற்கமைய முதலில் துடுபெடுத்தாடிய இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 317 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்தியாவின் துடுப்பாட்டத்தில் சிகர் தவான் 98 ஓட்டங்களையும், கே.எல்.ராகுல் ஆட்டமிழக்காது 62 ஓட்டங்களையும், தனது அறிமுக போட்டியில் விளையாடிய குருணால் பாண்டியா ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களை அதிரடியாக பெற்றுக் கொண்டார்.

இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு 318 என்ற கடின இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 42.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 251 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 66 ஓட்டஙகளால் தோல்வியடைந்;தது.

போட்டியின் ஆட்டநாயகனாக சிகர் தவான் தெரிவானார்.

இதற்கமைய இந்திய அணி 3 போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடரில் 3-1 என முன்னிலையடைந்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி இதே மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

administrator

Related Articles