பாண்டியாவின் ” தடியடி” அவுஸ்திரேலியா செம தோல்வி! தொடரை வென்ற இந்தியா!

பாண்டியாவின் ” தடியடி” அவுஸ்திரேலியா செம தோல்வி! தொடரை வென்ற இந்தியா!

சிட்டினியில் இன்று நடைப்பெற்ற இந்திய அவுஸ்திரேலிய அணிகளுகிடையால மூன்று போட்டகளை T20 தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய முதலில் அவுஸ்திரேலிய அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.

இதன்படி ஆட வந்த அவுஸ்திரேலிய அணி அணித்தலைவர் wade யின் திறமையான ஆரம்ப ஆட்டம் ஆட்டம் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களை பெற்றது.

ஆனால் இதை விட கூடுதலான ஓடுட்டங்களை அவுஸ்திரேலிய அணி பெரும் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் தமிழக வேகபந்து வீச்சாளரான நடராஜன் இன்றும் தமது திறைமையை அருமையாக காட்டினார்.அவர் 4 ஓவர்கள் பந்து வீசி 20 ஓட்டங்களுக்கு 2. விக்கெட்டுக்களை கைப்பற்றியது மட்டுமல்ல அவுஸ்திரேலிய அணியின் ஓட்டங்களை மட்டுப்படுத்தினார்.

இதையடுத்து வெற்றி இலக்கான 195 ஓட்டங்களை பெறும் நோக்கில் ஆடுகளம் வந்த இந்திய அணி ஆரம்பம் முதலே அமர்களமாக ஆடியது சேர்க்கர் தவானின் 52 ஓட்டங்கள் ( 36 பந்துகள் 4 பவுண்டரி 2 சிக்ஸர்கள்) அணிக்கு பலமாக இருந்தது.

அதேபோன்று அணித்தலைவர் விராத் கோலி 24 பந்துகளில் 2 பவுண்டனி 2 சிக்ஸர்கள் அடங்கலாக 40 ஓட்டங்களை பெற்றார்.

ஆனால் இறுதியாக போட்டியை நிறைவு செய்ய ஹர்திக் பாண்டியா அடிச்ச அடி செம பயர். அவர் 22பந்துகளுக்கு 3 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களை அடித்து அணியை வெற்றி பெற செய்தது மட்டுமல்ல தொடரின் நாயகனாகவும் தெரிவானார்

administrator

Related Articles