பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகர் வெங்கடேஷ் காலமானார்

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகர் வெங்கடேஷ் காலமானார்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமானவர் வெங்கடேஷ். அதைத்தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியலில் கதாநாயகிக்கு அப்பாவாக நடித்திருக்கும் வெங்கடேஷ், சன் டிவியில் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு தொடரிலும் நடித்திருந்தார்.

கிராமத்து கதை பின்னணியில் ஒளிபரப்பான பெரும்பாலான சீரியல்களில் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் 2.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்தார்.

அவருடைய மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விஜய் டிவி சார்பாகவும் உயிரிழந்த வெங்கடேஷூக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது

administrator

Related Articles