பிரதம பாதுகாப்பு அதிகாரி பதவி விலகினார்

பிரதம பாதுகாப்பு அதிகாரி பதவி விலகினார்


கனடாவின் பிரதம பாதுகாப்பு அதிகாரி அட்மிரால் ஆர்ட் மெக்டொனால்ட் தற்காலிக அடிப்படையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மெக்டொனால்ட் தொடர்பில் விசாரணை நடாத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சர் ஹார்ஜிட் சாஜான் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மெக்டொனால்ட் தற்காலிக அடிப்படையில் பதவியை ராஜினாமா செ;யதுள்ளார்.

படைகளின் தேசிய விசாரணைப் பிரிவினால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

என்ன விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பது பற்றிய தகவல்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை.

administrator

Related Articles