பிரம்டன் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பிரம்டன் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி


பிரம்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் கொல்லப்பட்டுள்ளார்.


பிரம்டனின் ருதர்போர்ட் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

வாகனமொன்றில் இருந்த நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்த தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பற்றிய விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கான்ஸ்டபிள் அகீல் மூக்கன் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு எவ்வாறு நடத்தப்பட்டது எதனால் தாக்குதல் நடத்தப்பட்டது தாக்குதலுடன் யாருக்கு தொடர்பு உண்டு என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சம்பவம் தொடர்பில் ஏதேனும் விபரங்கள் தெரிந்தால் அறிவிக்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

administrator

Related Articles