பிள்ளையான் பிணையில்வெளியே ! ஆதரவாளர்கள் மகிழ்ச்சி!

பிள்ளையான் பிணையில்வெளியே ! ஆதரவாளர்கள் மகிழ்ச்சி!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு சற்று முன்னர் பிறப்பிக்கப்பட்டது.

பிள்ளையானுக்கு மேலதிகமாக, இந்த வழக்கில் கைதான மேலும் நால்வரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு லட்சம் ரூபா வீதமான 2 சரீர பிணைகளின் கீழ் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிவநேசத்துரை சந்திரகாந்தன், 2015ஆம் ஆண்டு முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில், சிவநேசத்துரை சந்திரகாந்தன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட சிவநேசத்துரை சந்திரகாந்தன், தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பின்னணயில், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சிறையிலிருந்தே போட்டியிட்டு வெற்றியீட்டினார்

administrator

Related Articles