பி.சி.ஆர்ரில் மோசடி! உயர்மட்ட விசாரனை ஆரம்பம்!

பி.சி.ஆர்ரில் மோசடி! உயர்மட்ட விசாரனை ஆரம்பம்!


இலங்கையில் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் பி.சி.ஆர் மோசடி தொடர்பில் உயர்மட்ட விசாரணைகள் ஆம்பிக்கப்பட்டுள்ளன.

கொவிட் தொற்றாளர்களை அடையாளம் கண்டுக்கொள்ளும் வகையில் பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன்படி, சுகாதார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் வைத்தியர்கள் இணைந்து, சர்வதேச மருத்துவ உபகரண நிறுவனங்களுடன் பாரிய பி.சி.ஆர் வர்த்தக நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திட்டமிட்ட குழுவொன்று, நிதி பகிர்ந்தளித்துள்ளமை குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குழுவினர், ஐரோப்பிய நாடொன்றிலிருந்து பி.சி.ஆர் இயந்திரத்தை இறக்குமதி செய்துள்ளதுடன், அதன் பின்னர் பி.சி.ஆர் பரிசோதனை உபகரணங்களையும் கொண்டு வருவதற்கு தன்னிச்சையான தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த தன்னிச்சையான தீர்மானம் காரணமாக, உலக சுகாதார ஸ்தாபனத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடவும், அதிக விலையை கொண்டு பி.சி.ஆர் பரிசோதனை உபகரணங்கள் கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பரிசோதனை உபகரணங்கள் மற்றும் ஆய்வு உபகரணங்கள் 2000 ரூபாவிற்கு கொள்வனவு செய்வதற்கான இயலுமை காணப்பட்ட போதிலும், பரிசோதனை உபகரணமொன்று 3000 ரூபாவிற்கும், ஆய்வு உபகரணமொன்று 1000 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதுடன், குறைந்த விலைக்கு வழங்கும் நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்களவு சந்தர்ப்பமே வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறைந்த விலைகளில் பி.சி.ஆர் உபகரணங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களை விடவும் குறைந்த விலைவில், குறித்த உபகரணங்கள் முதலில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதன்பின்னர், குறைந்த விலையில் விற்பனை செய்யும் நிறுவனங்கள், குறித்த விலை மனுகோரலில் இருந்து விலகியதை அடுத்து, குறித்த நிறுவனங்கள் தன்னிச்சையாக அதிக விலைகளில் பி.சி.ஆர் உபகரணங்களை திட்டமிட்டு விற்பனை செய்துள்ளதாக அறிய முடிகின்றது.

இலங்கையில் உருவான கொவிட் இரண்டாவது அலையின் பின்னர், இதுவரையான காலம் வரை 4 லட்சத்து 18 ஆயிரத்து 287 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி டு ரூ சிலோன்

administrator

Related Articles