பீட்டர்ப்ரோ தீ விபத்தல் ஒருவர் பலி

பீட்டர்ப்ரோ  தீ விபத்தல் ஒருவர் பலி


பீட்டர்ப்ரோவில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

தீயனைப்பு படையினருக்கு இந்த தீ விபத்து குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைந்து சென்ற படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக் கொண்டு வந்துள்ளனர்.

எவ்வாறெனினும் வீட்டில் இருந்த இரண்டு பேர் தப்பித்துக் கொண்டதாகவும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீ விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்தவர் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் சம்பவத்திற்கான காரணங்களும் கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த தீ விபத்து குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

administrator

Related Articles