புதுச்சேரியில் கடைசி நேரத்தில் 10 தொகுதிகளிலும் வாபஸ் – தேர்தலைப் புறக்கணித்த பா.ம.க !!

புதுச்சேரியில் கடைசி நேரத்தில் 10 தொகுதிகளிலும் வாபஸ் – தேர்தலைப் புறக்கணித்த பா.ம.க !!

புதுச்சேரியில் வேட்புமனுத் தாக்கல் செய்த 10 தொகுதிகளிலும் பா.ம.க வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பா.ம.க இடம்பெற்றுள்ளது. பா.ம.க 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பா.ம.கவுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

அதனையடுத்து, பா.ம.க தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. மேலும், 10 தொகுதிகளில் பா.ம.க வேட்பாளர்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர். இந்தநிலையில், வேட்பு மனு திரும்பப் பெறும் கடைசி நாளான இன்று வேட்புமனுத் தாக்கல் செய்த பத்து வேட்பாளர்களும் வேட்புமனுவைத் திரும்பப் பெற்றனர்.

புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தலில் போட்டயிடப் போவதில்லை என்று புதுவை மாநில அமைப்பாளர் தனராஜ் தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles