புரெவி புயல் காரணமாக வருமானம் இழந்த மீனவர்கள் !!

புரெவி புயல்  காரணமாக வருமானம் இழந்த மீனவர்கள் !!

ஏ.ஆர்.எம்.றிபாஸ் கிண்ணியா நிருபர்

திருகோணமலை மாவட்டத்தில் புரெவி புயல் மாலை 6.00 மணியிலிருந்து 10.30 மணி வரை உணரப்ப்பட்டது இருந்த போதும் புயலின் தாக்கம் பாரியளவில்  தாக்கத்தை செலுத்தவில்லை வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறப்பட்ட புயலானது திருகோணமலையை தாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது .

ஆனால் புயலின் தாக்கம் சற்று குறைவாகவே காணப்படுகின்றது திருகோணமலை மாவட்டத்தில் தற்போது காலநிலை சீராகி வருவதாக கடற் தொழிலாளர்கள்.
தெரிவிக்கின்றனர் கடலலை சீற்றம் குறைந்து, கடல் கொந்தளிப்பு சற்று குறைந்துள்ளதாகவும், காற்றினுடைய வேகமும் குறைந்து காணப்படுவதாக மீனவர்  தெரிவிக்கின்றன மேலும் கடற்றொழிலுக்குச்  செல்லாமையினால் தங்களுடைய வருமானத்தை இழந்து கஷ்டத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர் எனவே உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி நிவாரண  உதவிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்

administrator

Related Articles