புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் தவசியிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார் ரஜினிகாந்த்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் தவசியிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார் ரஜினிகாந்த்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் தவசியிடம் தொலைபேசி மூலம் ரஜினிகாந்த் நலம் விசாரித்துள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் குணச்சித்திர நடிகர் தவசி அவர்களின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் நலம் விசாரித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் திண்டாடி வந்த குணசித்திர நடிகர் தவசி குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாக செய்திகள் பரவின. வீடியோ பதிவொன்றில் அவர் உதவி கேட்டது மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

நடிகர் தவசியின் உடல்நிலையை அறிந்த பல நடிகர்கள் தற்போது அவருக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். நடிகர் சூரி 20,000 ரூபாயும், சிவகார்த்திகேயன் தனது ரசிகர் மன்ற நிர்வாகி மூலம் 25,000 ரூபாயும் நிதி உதவி செய்தனர். அவர்களைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி தவசிக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கினார். அவருடைய நண்பர் சௌந்தர் மூலமாக இந்தப் பணம் நேரடியாக தவசியிடம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை பெற்று வரும் தவசி அவர்களிடம் தொலைபேசி மூலம் பேசினார். மேலும் தற்பொழுது மேற்கொண்டுவரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

administrator

Related Articles