“புற்றுநோய்” கிருமி இருப்பதாக சந்தேகிக்கப்படும் தேங்காய் எண்ணெயை மீள அனுப்ப நடவடிக்கை!!

“புற்றுநோய்”  கிருமி இருப்பதாக சந்தேகிக்கப்படும் தேங்காய் எண்ணெயை மீள அனுப்ப  நடவடிக்கை!!

pinterest sharing buttonemail sharing buttonsms sharing buttonsharethis sharing button

மனித பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் கொள்கலன்களை உரிய நிறுவனங்களின் எண்ணெய் குதங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுங்கப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜி.வி ரவிப்பிரிய தெரிவித்துள்ளார்.

எஃப்லடொக்ஸிஸ் எனப்படும் புற்றுநோய்க் காரணி இந்தத் தேங்காய் எண்ணெய்யில் கலந்திருக்கிறதா என்பது பற்றி விசாரணைகளை மேற்கொள்ள காலம் எடுப்பதால் இதனை எண்ணெய்யை இறக்குமதி செய்த நிறுவனங்களின் குதங்களுக்கு மீண்டும் அது அனுப்பப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

 இரண்டு நிறுவனங்கள் இதனை இறக்குமதி செய்திருக்கின்றன. விசாரணைகளின் பின்னர் இதில் உரிய புற்றுநோய்க் காரணி அடங்கியிருக்கின்றமை தெரியவந்துள்ளது. இந்தத் தேங்காய் எண்ணெய்யை மீள ஏற்றுமதி செய்யுமாறு உரிய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

administrator

Related Articles