புற்றுநோய் சிகிச்சைக்குப் பணமில்லாமல் உயிருக்குப் போராடும் நடிகர் தவசி: மனதை உறைய வைக்கும் மெலிந்த தேகம்- நீளுமா திரைத்துறையின் உதவிக்கரம்?

புற்றுநோய் சிகிச்சைக்குப் பணமில்லாமல் உயிருக்குப் போராடும் நடிகர் தவசி: மனதை உறைய வைக்கும் மெலிந்த தேகம்- நீளுமா திரைத்துறையின் உதவிக்கரம்?

தனியார் மருத்துவமனையில் புற்றுநோயுடன் போராடும் அவருக்கு மதுரையைச் சேர்ந்த நாடகக் கலைஞர்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்துள்ளனர்.

தற்போது தவசியின் சிகிச்சைக்கு சரவணா மருத்துவமனை சார்பில் அதன் உரிமையாளரும், திருப்பரங்குன்றம் திமுக எம் எல் ஏவுமான டாக்டர் சரவணன் தனது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் உதவி வருகிறார்.

இதுகுறித்து எம் எல் ஏ சரவணன் கூறுகையில், ‘‘தவசிக்கு புற்றுநோய் உணவுக்குழாயில் வந்துள்ளது. அதனால், சாப்பிட முடியாமல் அவர் சிரமப்பட்டார்.

தற்போது எண்டோஸ்கோப்பி மூலம் சிகிச்சை அளித்து சாப்பிட வைத்துள்ளோம். அவரது நிலையை உணர்ந்து இலவசமாக எங்கள் மருத்துவமனை சார்பில் சிகிச்சை வழங்கி வருகிறோம்,

இருப்பினும், இவருக்கு யாரேனும் உதவ நினைத்தால் அவரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கினால் வறுமையில் இருக்கும் அவரின் குடும்பத்தாருக்கு அது பேருதவியாக இருக்கும்’’ என்றார்.

இதற்கிடையில், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பலரும் தவசியுடன் நடித்த சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களை டேக் செய்து உதவி கோரி வருகின்றனர்.

திரைத்துறையின் உதவிக்கரம் தவசியைக் காப்பாற்ற நீளுமா?

administrator

Related Articles