புளாய்ட் குடும்பத்துக்கு 196 கோடி நிவாரணம்

புளாய்ட் குடும்பத்துக்கு 196 கோடி நிவாரணம்

ஜோர்ஜ் புளாய்டின் குடும்பத்தினருக்கு 27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை நிவாரணமாக (இலங்கை மதிப்பில் 196 கோடி) வழங்க மினியா நகர பொலிஸார் இணங்கியுள்ளனர்.

இதுகுறித்து ஜோர்ஜ் பிளாய்ட் குடும்பத்தின் சட்டத்தரணி பெஞ்சமீன் கிரம்ப் கூறுகையில்:

“அமெரிக்க வரலாற்றில் ஒரு தவறான மரணத்துக்கான வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கப்படும்; மிகப்பெரிய நிவாரணம் இதுவாகும்”என்றார்.

ஜோர்ஜ் புளாய்டின் சகோதரி பிரிட்ஜெட் புளாய்ட் கூறுகையில், ‘எனது சகோதரர் ஜோர்ஜ் புளாய்டின் நீதிக்கான பயணத்தின் இந்தப் பகுதி சுமுகமாக தீர்க்கப்பட்டதில் மகிழ்ச்சி’ என தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரி டெரிக் சாவின் உள்ளிட்ட 4 பொலிஸார்; மற்றும் மினியா பொலிஸ் நகர நிர்வாகத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து டெரிக் சாவின் உள்ளிட்ட 4 பொலிஸாரும் பணிநீக்கம் செய்யப்பட்டு, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

டெரிக் சாவின் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இதில் டெரிக் சாவின் மீதான விசாரணை மினசோட்டாவின் ஹென்னெபின் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த வாரம் ஆரம்பமாகியது.

இதன்போது குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்த டெரிக் சாவின் தனது பொலிஸ் பயிற்சியை முறையாக பின்பற்றியதாக கூறினார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இந்த வழக்கில் டெரிக் சாவின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக 65 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

administrator

Related Articles