பூண்டுலோயாவில் கழிவு தேயிலை தொழிற்சாலை சுற்றிவளைப்பு, இருவர் கைது (படங்கள்)

பூண்டுலோயாவில் கழிவு தேயிலை தொழிற்சாலை சுற்றிவளைப்பு, இருவர் கைது (படங்கள்)

பூண்டுலோயா கும்பலோலுலா பகுதியில் சட்டவிரோதமான முறையில் கழிவு தேயிலையை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை தலவாக்கலை விசேட அதிரடிப்படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.

இந்த தொழிற்சாலையில் இருந்து பொதிச் செய்யப்பட தயாராக இருந்த சுமார் 4195 கிலோ கழிவு தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் தொழிற்சாலையில் கடமையாற்றிய இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உறுதிப்பத்திரம் இல்லாமல் சூட்சுமமான முறையில் இந்த தொழிற்சாலை நடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதாக நபர்களையும், கைப்பற்றப்பட்ட கழிவு தேயிலையையும் பூண்டுலோயா பொலிஸாரிடம் ஒப்படைக்க தலவாக்கலை விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

administrator

Related Articles