பூண்டுலோயா பகுதியில் கழிவுத் தேயிலையை கடத்திய இருவர் சிக்கினர் (படங்கள்)

பூண்டுலோயா பகுதியில் கழிவுத் தேயிலையை கடத்திய இருவர் சிக்கினர் (படங்கள்)

தலவாக்கலை பூண்டுலோயா பகுதியில் சட்டவிரோதமாக கடத்தப்பட 2755 கிலோ கழிவுத் தேயிலையை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

தனியார் தொழிற்சாலை ஒன்றுக்கு கொண்டுச் செல்லப்படும் போதே இந்த கழிவு தேயிலை தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கழிவுத் தேயிலையை கடத்திய சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கழிவுத் தேயிலை அக்கரபத்தனை போபத்தலாவ பகுதியில் இருந்து கம்பளை பகுதிக்கு கடத்தப்பட இருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

administrator

Related Articles