பூப்பந்தாட்ட விளையாட்டை ஊக்கிவிக்கும் முகமாக உபகரணங்கள் வழங்கி வைப்பு!

பூப்பந்தாட்ட விளையாட்டை ஊக்கிவிக்கும் முகமாக உபகரணங்கள் வழங்கி வைப்பு!

உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையினால்(WTBF) முல்லைத்தீவு மாவட்டத்தில் பூப்பந்தாட்ட விளையாட்டுத்துறையை ஊக்கிவிக்கும் முகமாக பூப்பந்தாட்ட உபகரணங்கள் இன்று(25) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட பூப்பந்தாட்ட சங்கத்தின் ஒழுங்கமைப்பில் முள்ளியவளை வித்தியானந்த கல்லூரியில் மு.ப 11.30மணிக்கு இடம்பெற்ற இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் லிசோ கேகிதா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு குறித்த உபகரணத் தொகுதியை மாணவர்களிடம் வழங்கி வைத்தார்.

இதன்போது இப் பாடசாலையில் உயர்தரப்பிரிவில் கல்விபயிலும் ஏழு மாணவர்களுக்கு தலா ரூபா இரண்டாயிரம் பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் கல்லூரி முதல்வர், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர், மாவட்ட செயலக மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலக விளையாட்டுப் பிரிவு உத்தியோகத்தர்கள், மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

administrator

Related Articles