பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி

எஸ்.எம்.எம்.முர்ஷித்  


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் மக்களின் வாழ்கை தரத்தினை முன்னேற்றும் நோக்கில் வாகரை பிரதேச செயலகத்தினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தினை முன்னேற்றும் நோக்கில் தொழில் முயற்சிக்கான உபகரண உதவிகள் செயலக கேட்போர் கூடத்தில் வழங்கி வைக்கப்பட்டது.பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.அழகுராஜின் ஒருங்கிணைப்பில் பிரதேச செயலாளர் எஸ்.ஹரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் செயலக சமூகசேவை உத்தியோகத்தர் அ.நஜீம், வெளிநாட்டு பணியக உத்தியோகத்தர் எஸ்.சயனொளி, சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.புலேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது மீட்சி அமைப்பின் நிதி உதவி மூலம் பாரம்பரிய உணவு உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை சேர்ந்த எட்டு (08) பெண்களுக்கு உணவு உற்பத்தி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதாக பிரதேச செயலாளர் எஸ்.ஹரன் தெரிவித்தார்.

administrator

Related Articles