பெண்கள் தான் நாட்டின் கண்கள். மகளிர் தின வாழ்த்துச்செய்தியை பகிர்ந்து கொண்டார் அ.இ.ம.மு.மு தலைவர் கலாநிதி இளங்கோ காந்தி.

பெண்கள் தான் நாட்டின் கண்கள். மகளிர் தின வாழ்த்துச்செய்தியை பகிர்ந்து கொண்டார் அ.இ.ம.மு.மு தலைவர் கலாநிதி இளங்கோ காந்தி.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

அரசியல், சமூகசெயல்பாடுகள், பொழுதுபோக்கு, விளையாட்டு, தொழில்துறை என சகல துறைகளிலும் இன்று பெண்கள் இல்லாத இடங்களே இல்லை. பெண் என்பவள் இந்த தேசத்தை கட்டியமைக்கும் வலிமை கொண்டவள். ஒரு குடும்பத்தை முன்னேற்றவும், குழந்தைகளின் எதிர்காலத்தை சரியான தொலைநோக்கோடு கொண்டு செல்லவும் பெண்களின் பங்கு என்பது அளப்பறியது.
பெண் நினைத்தால் எதையும் சாதிப்பாள் என்று சொல்வார்கள்.. உண்மைதான்.. பெண்ணின் வைராக்கியம் என்பது ஆணை விட வலியது. உடல் ரீதியான உறுதியில் ஆண் வலியவன் என்றால், மன ரீதியான உறுதியில் பெண் வலியவள்.
அப்படிப்பட்ட மகளிர்க்கு மார்ச் 8ம் திகதி உலக மகளிர் தினமாக
அனுஷ்டிப்பது என்பது மிகவும் மகிழ்ச்சியான விடையமாகும். என அகில இலங்கை முன்னேற்ற முன்னணியின் தலைவர் கலாநிதி இளங்கோ காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

இன்று பல வேறு நாடுகளில் பல்வேறு சமூகங்களில்
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே
உள்ளது.இதனை வன்மையாக கண்டிப்பதோடு பெண்கள் எப்போதும் தங்களின்
பாதுகாப்பை தாங்களே உறுதிப்படுத்திக்கொள்ள தற்பாதுகாப்பு
கலைகளை போன்ற பாதுகாப்பு விடயங்களையும் பயில வேண்டும். எந்த ஒரு
சந்தர்ப்பத்திலும் பெண்ணானவள் தன்னுடைய ஒழுக்கத்திற்கோ மானத்திற்கோ
பங்கம் வரமால் நடந்துக்கொள்ள வேண்டும்.என குறிப்பிட்டார்.

மேலும் பெண்கள் தன் நடையில், உடையில் கவனத்துடன் நடந்துக்கொள்ளவேண்டும்.பள்ளி செல்லும் பெண் பிள்ளைகளின்
நடவடிக்கைகளையும் செயற்பாடுகளையும் அவர்களின் பாதுகாப்பினை கருத்தில்
கொண்டு உள்ளது.பெற்றோர்கள் தினம்தோறும் அவர்களின் செயற்பாடுகளை
ஆராய வேண்டும் அத்தோடு அவர்களின் பழக்க வழக்கங்களிலும் தினந்தோறும்
பெற்றோர் அவதானம் செலுத்த வேண்டும்.

பெண் பிள்ளைகள் என்பது நமது
நாட்டின் சமூகத்தின் எதிர்காலம்.அவர்களின் வெற்றிக்கு உறு துனையாக இருக்க வேண்டும்.அவர்களின் கல்வி எதிர்கால கனவுகள் நனவாக நம் பங்களிப்புகள்
எப்போதும் இருக்க வேண்டும் பெற்றோர் மட்டும் அல்ல பெண் பிள்ளைகளை
பாதுகாக்கும் கடைமை நமக்கும் உள்ளது.என்பதை மனித குலத்தில் பிறந்த
ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். என குறிப்பிட்டார்.

இன்று உலகத்தில் 25 வீத நாடுகளில் பெண்களே தலைமை ஏற்று மிக சிறப்பாக ஆட்சி
நடத்தி வருகிறார்கள்.உண்மையில் நாம் பெருமைக்கொண்டு பாரட்ட வேண்டிய
விடயம்.இன்று உலகத்தை ஆட்டிப்படைக்கும்
கொரோனாவை மிக துரித நடவடிக்கை மூலமாக கட்டுக்குள் கொண்டு வந்து
தனது நாட்டையும் மக்களையும் பாதுகாத்ததில் முதன்மை வகிப்பவர்கள் இந்த
பெண் ஆட்சியாளர்களே ஆகவே அவர்களுக்கு இரு கரங்களையும் கூப்பி
அவர்களின் ஆளுமைக்கு மரியாதை செலுத்தி பெருமிதம் கொள்வதோடு எதிர் வரும் காலங்களில் கல்வி,காலச்சாரம் அரசாங்கங்களின் அரசியல்
துறைகளிலும் பெண்கள் ஈடுப்பட்டு அவர்களின் வளர்ச்சிக்காக போரடி முன் வர
வேண்டும் என்று மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

administrator

Related Articles