பெண் உத்தியோஸ்தரை தாக்கிய அதிகாரி கைது! நாமல் ராஜபக்ஷ கண்டனம்! (VIDEO)

பெண் உத்தியோஸ்தரை தாக்கிய  அதிகாரி கைது! நாமல் ராஜபக்ஷ கண்டனம்! (VIDEO)

பெண் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ், கம்பஹா – உடுகம்பொல வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச அலுவலகமொன்றில் பணிப்புரியும் பெண்ணொருவர் மீது உயர் அதிகாரியொருவர் தாக்குதல் நடத்தும் காணொளியொன்று கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்தது.

இந்த சம்பவம் உடுகம்பொல வீதி அபிவிருத்தி அதிகார சபையில் இடம்பெற்றதாக கண்டறியப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

இதேவேளை இந்த சம்பவத்தை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கண்டித்துள்ளார்.

இவ்வாறான ஒழுக்கமில்லா செயற்பாடுகளை கண்டிப்பதாகவு துரித விசாரனைகளை மேற்கொள்ளுமாறு அவர் நேற்று தெரிவித்திருந்தார்.

administrator

Related Articles