பெய்டன் – ட்ரூடேவிற்கு இடையில் பேச்சுவார்த்தை

பெய்டன் – ட்ரூடேவிற்கு இடையில் பேச்சுவார்த்தை


கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடேவிற்கும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பெய்டனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது.

இணைய வழியாக இரு நாடுகளின் தலைவர்களும் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

கொவிட் நோய்த் தொற்று பரவுகை காரணமாக இவ்வாறு மெய்நிகர் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது.

உலக காலநிலை அச்சுறுத்தல்கள், கொவிட் நோய்த் தொற்று மற்றும் பொருளாதார அழிவுகள் போன்ற விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடிய பிரஜைகளான மைக்கல் கோர்விக் மற்றும் மைக்கல் ஸ்பாவோர் ஆகியோரை விடுதலை செய்யும் முயற்சிகளுக்கு உதவுவதாக அமெரிக்க ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

administrator

Related Articles