“பெருந்தோட்டங்களில் நடைபெறும் திருவிழாக்களில் கூட்டமாக சாமியை தரிசிக்க தடை, மீறினால் திருவிழா நிறுத்தப்படும்”

“பெருந்தோட்டங்களில் நடைபெறும் திருவிழாக்களில் கூட்டமாக சாமியை தரிசிக்க தடை, மீறினால் திருவிழா நிறுத்தப்படும்”

நுவரெலியா மாவட்டத்தில் நகர மற்றும் பெருந்தோட்டங்களில் நடைபெறும் ஆலய திருவிழாக்களில் பெருமளவு பக்தர்கள் கூட்டமாக ஒன்று கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

50 க்கும் குறைவான பக்தர்களே திரு விழாக்களில் பங்குகொள்ள வேண்டும் என நுவரெலியா மாவட்ட சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொவிட் அச்சுறுத்தல் நிலைமைக்கு மத்தியில் பெருந்தோட்டங்களில் ஆலய திருவிழாக்கள் நடைபெறுவதை கருத்தில் கொண்டு நுவரெலியா மாவட்ட சுகாதார அதிகாரிகள் வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளனர்.

அந்த வழிக்காட்டலிலேயே இந்த விடயம் உள்ளிட்ட பல விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றை கடைப்பிடிப்பது அவசியம் எனவும், அதனை மீறி செயற்படுவது தண்டனைக்குரிய குற்றம் எனவும் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

அத்துடன் தம்மால் வழங்கப்பட்டுள்ள 12 சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்ற தவறினால் ஆலய திருவிழாக்களை பொது சுகாதார அதிகாரிகள் தலையிட்டு நிறுத்தும் நிலை ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

அந்த வழிக்காட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய விதிகள் வருமாறு…

• 50 க்கும் அதிகரிக்காத பக்தர்கள் கூடுகை
• திருவிழாவை காண வரும் அனைவரும் முக கவசம் அணிதல்
• இருவருக்கிடையில் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பேணல்
• வெளியிடங்களில் இருந்து வருவோருக்கு பூஜை வழிப்பாடுகளில் கலந்துக்கொள்ள தடை

இவ்வாறு சுகாதார வழிக்காட்டல்கள் அமுலில் உள்ள போதும் எமது பெருந்தோட்ட மக்கள் அதனை மீறி செயற்பட்டு வருவதாக எமது செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

அதனை மெய்பிக்கும் சில புகைப்படங்கள்

administrator

Related Articles