பெருந்தோட்ட மற்றும் கிராமப்புற மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் மற்றும் இதர பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு வழங்க நடவடிக்கை.

பெருந்தோட்ட மற்றும் கிராமப்புற மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் மற்றும் இதர பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு வழங்க நடவடிக்கை.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

நுவரெலியா மாவட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பல நீர் உட்பட பல இதர பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்குவதற்கான கலந்துரையாடல் நிகழ்வொன்று கிராமப்புற மற்றும் பிராந்திய குடிநீர் விநியோக மேம்பாட்டுத் துறை இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தா தலைமையில் நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் 05/03/2021 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.மேலும் நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு வழங்கப்பட நடவடிக்கையும் எட்டப்பட்டது.

இந்நிகழ்வில் வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்னாயக்க,நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க,அரச அதிகாரிகள், உள்ளூராட்சி பிரதிநிதிகள் மற்றும் அமைச்சகம் நீர் வழங்கல் மற்றும் வடிகால். சமூக நீர் வழங்கல் திணைக்கள அதிகாரிகள் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

administrator

Related Articles