பேலியகொட ,வத்தளை உட்பட கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை நீர் வெட்டு!!

பேலியகொட ,வத்தளை உட்பட கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை நீர் வெட்டு!!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை(23) காலை 09 மணி முதல் 06 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, பேலியகொட , வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகளில்
நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், களனி, பியகம, மஹர, தொம்பே, கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் இந்த காலப்பகுதியில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

administrator

Related Articles