” பைசர்” இருந்தும் இறக்கும் வீதம் குறையவில்லை! பிரிட்டிஷ் கொலம்பியாவில் 24 பேர் மரணம்!!

” பைசர்” இருந்தும் இறக்கும் வீதம் குறையவில்லை! பிரிட்டிஷ் கொலம்பியாவில்  24 பேர் மரணம்!!

கொரோனாவிற்கான தடுப்பு மருந்து தங்களது மாகணத்திற்கு வந்த போதிலும் மரண வீதம் குறையவில்லை என பிரிட்டிஷ் கொலம்பியா ஊடகங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளன.

கனடாவிற்கு தடுப்பு வந்ததும் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தது உண்மை.ஆனால் மரண வீதம் குறையவில்லை என்பது ஆதங்கமே.

இன்றைய தரவுகளின் பிரகாரம் 24 பேர் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த ஒரு நாளில் மரணமாகியுள்ளனர். இதுவரை உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 692.

அத்துடன் 640 பேருக்கு இன்று வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது. வைத்திரசாலையில் 362 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 9, 950 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக பொது சுகாதார அதிகாரிகள் கூறுகிறார்கள்.

administrator

Related Articles