“பைசர்” கொரோனா தடுப்பு மருந்துக்கு கனடா சுதார பிரிவு அனுமதி! பிரதமர் நன்றி தெரிவிப்பு

“பைசர்” கொரோனா தடுப்பு  மருந்துக்கு  கனடா சுதார பிரிவு அனுமதி! பிரதமர் நன்றி தெரிவிப்பு

கடந்த ஒக்கோபர் மாதம் 9 ஆம் திகதி பைசர் தடுப்பு மருந்தை தயாரிக்கும் நிறுவனம் தங்களிடம் அனுமதி கேட்டதாக கனடா சுகாதார பிரிவு கூறுகிறது. பல்வேறான ஆய்வுகளுக்கு பின்பு இந்த மருந்துக்கு அனுமதியை வழங்கியதாக சுகாதார அதிகாரிகள் இன்று கூறினார்கள்.

இதன்படி உலகின் மூன்றாவது நாடாக கனடா இந்த தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கி இருக்கிறது. இதற்கு முன்னர் அவசர நிலைமையை கருத்திற்கொண்டு பிரித்தானியாவும் பாஹாரேனும் அனுமதி வழங்கி இருந்தன.

புதிய விஞ்ஞானத்திற்கும் தொழிநுட்பத்திற்கும் நன்றி தெரிவிப்பதாக கூறி இருக்கும் கனடாவின் சுகாதார மையமான ஹெல்த் கனடா , கொவிட் 19 ன் முதல் தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்குவதாக சொல்லி இருக்கிறது

அடுத்த வாரம் 2 லட்சத்து 49 ஆயிரம் தடுப்பு ஊசி மருந்துகள் கனடா வந்தடைய இருக்கிறது. இது முதற் கட்டம்

அடுத்த வருடம் முதல் காலாண்டில் பைசர் தடுப்பு மருந்துடன் மொடனோ தடுப்பு மருந்தும் கனேடியர்களுக்கு கிடைக்க இருக்கிறது.

மொடனோ தடுப்பு மருந்துக்கு இன்னும் ஹெல்த் கனடா அனுமதி வழங்கவில்லை. எவ்வாறியினும் 30 லட்சம் கனேடிய மக்களுக்கு ஊசி ஏற்றப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த தடுப்பு மருந்திற்காக இரவு பகல் பராது உழைத்த சுகாதார துறையினருக்கு பிரதமர் ஜஸ்டின் டூருடோ நன்றி தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles