பொகவந்தலாவவையில் இரவோடு இரவாக பஸ் பெட்டரிகள் திருட்டு, திருடர்களை தேடி பொலிஸார் வலை வீச்சு (படங்கள்)

பொகவந்தலாவவையில் இரவோடு இரவாக பஸ் பெட்டரிகள் திருட்டு, திருடர்களை தேடி பொலிஸார் வலை வீச்சு (படங்கள்)

பொகவந்தலாவ – ஹட்டன் வீதியில் போக்குவரத்தில் ஈடுப்படும் தனியார் பேருந்துகள் நான்கில் பொருத்தப்பட்டிருந்த மின்கலங்கள் (பெட்டரி) நேற்றிரவு (25) திருடப்பட்டுள்ளன.

குறித்த பேருந்துகளில் இருந்த 8 மின்கலங்கள் அடையாளம் தெரியாதவர்களால் திருடப்பட்டுள்ளதாக பஸ் உரிமையாளர்கள் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பொகவந்தலாவ தபால் நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளிலேயே இவ்வாறு மின்கலங்கள் திருடப்பட்டுள்ளன.

திட்டமிட்ட வகையில் இவ்வாறு மின்கலங்கள் திருடப்பட்டுள்ளதாக சாரதிகளும், நடத்துனர்களும் தெரிவித்துள்ளனர்.

இன்று (26) காலை போக்குவரத்துக்காக பேருந்துகளை இயக்கும் போதே மின் கலங்கள் திருடப்பட்டுள்ளமை தெரியவந்தாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாற்பதாயிரம் முதல் ஐம்பதாயிரம் பெறுமதியான மின் கலங்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

வானங்களுக்கான மின்கலங்களுக்கு தற்போது சநதையில் பாரிய கேள்வி நிலவுவதாக சாரதிகளும், நடத்துனர்களும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நகரில் பொருத்தப்பட்டுள்ள கமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை பரிசோதித்து முழுமையான விசாரணைகள் நடத்தப்படும் என பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மின்கலங்கள் திருடப்பட்டுள்ளமையால் இன்றைய தினம் போக்குவரத்தில் ஈடுப்பட முடியாது என சாரதிகளும், நடத்துனர்களும் தெரிவித்துள்ளனர்.

administrator

Related Articles