பொன்சேகாவிடம் 1 பில்லியன் நட்டஈடு கோரிய முரளி

பொன்சேகாவிடம் 1 பில்லியன் நட்டஈடு கோரிய முரளி


நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவிடம் ஒரு பில்லியன் ரூபா நட்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென முன்னாள் கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரன் கோரியுள்ளார்.

கடந்த 15ம் திகதி கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் சரத் பொன்சேகா கிரிக்கட் வீரர் முரளிதரனை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

வெலிகந்த பிரதேசத்தில் இரண்டாயிரம் ஏக்கர் காணியை முரளி இந்த அரசாங்கத்திடம் பெற்றுக் கொண்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் எதுவும் உண்மையில்லை என முரளிதரன் தனது சட்டத்தரணிகள் ஊடாக தெரிவித்துள்ளார்.

போலியான பிரச்சாரம் மேற்கொண்டதனால் தமக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு நட்டஈடாக ஒரு பில்லியன் ரூபா பணம் ஏழு நாட்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு வழங்கப்படாவிட்டால் வழக்குத் தொடரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவிற்கு சட்டத்தரணிகள் ஊடாக அனுப்பி வைத்துள்ள நிபந்தனைக் கடிதத்தில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles