ராஜகிரியவில் பொழுது விடியும் வேளையில் பலியான இரு உயிர்கள்

ராஜகிரியவில் பொழுது விடியும் வேளையில் பலியான இரு உயிர்கள்

இன்று (23) காலை ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராஜகிரிய மேம்பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் அரணை அதிவேகமாக வந்த மோட்டார் வாகனம் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 52 வயதான உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொலிஸ் அரணை மோதிய குறித்த மோட்டார் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதில் லொறியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

administrator

Related Articles